×

சென்னையில் 579 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னையில் 579 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய சென்னையில் 2, வட சென்னையில் 3, தென் சென்னையில் 3 வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும். சென்னை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 39,25,144. மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை தொகுதிகளில் 39 லட்சத்துக்கு 29 ஆயிரத்து 346 வாக்காளர்கள் உள்ளனர்.

நாளொன்றுக்கு 3 லட்சத்து 25 ஆயிரம் படிவங்கள் கொடுக்கப்பட உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இன்று முதல் ஏப்ரல் 13க்குள் சென்னை வாக்காளர்களுக்கு பூத் சிலிப் தரும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். வாக்காளர் கையெடு உடன் பூத் சிலிப் கொடுக்கப்பட்டு வருகிறது; 4,083 களப்பணியாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வாக்குச்சாவடி மையங்கள் 3726. சென்னையில் 938 இடங்களில் 3,038 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் 579 என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். முன்னதாக சென்னை மாவட்டத்தில் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தேர்தல் ஆணைய உத்தரவின்படி இன்று முதல் வரும் 13ம் தேதி வரை வீடு வீடாக சென்று அதிகாரிகள் பூத் ஸ்லிப்பை வழங்க உள்ளனர். சென்னையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்புடன் வாக்காளர் கையேடு விநியோகம் செய்யப்பட்டது.

The post சென்னையில் 579 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Election Officer ,Radhakrishnan ,Central Chennai ,North Chennai ,South Chennai ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...